உலகமே கேள்...
நீங்கள் அமைதிக்காத்தீர்கள்!
நாங்கள் அமில குண்டுகளால் அழிக்கப்பட்டோம் !!
நீங்கள் பேச்சுவார்த்தை வேண்டும் என்றீர்கள்!
நாங்கள் வான்க்கனைகளால் கொல்லப்பட்டோம் !!
நீங்கள் அத்துமீறல் என்றீர்கள்!
நாங்கள் கொத்துக்கனைகளால் கொன்றோழிக்கப்பட்டோம் !!
நீங்கள் மக்களை பாதுகாக்க சொன்னீர்கள் !
நாங்கள் பாதுகாப்பு வளையத்தின்னுலேயே ஒழிக்கப்பட்டோம்!!
இறுதியாக
நீங்கள் போர் குற்றம் நடந்திருக்கலாம் என்றீர்கள்! !
சிங்கள பேரின வாதிகளோ!! நாங்கள் புலிகளை தான் ஒழித்தோம் என்றனர்!!
உங்களில் எவரேனும் உண்மையாக போரை நிறுத்துங்கள் என்றீரா?
நாங்கள் அழிக்கப்பட்டோம் நீங்கள் கண்டு சுவைத்தீர்கள்!
போதும் உங்கள் பாசாங்கு பேச்சுகள்...!
எம்மை பற்றி பேசும் தகுதி இழந்தீர் !!
இந்தியாவே கேள்...
சீக்கியன் மயிருக்காக பிரான்ஸ் நாட்டிடம் பேசிய மன்மோகன் சிங்....
தமிழன் உயிருக்காக சிங்கள நாட்டிடம் பேசாதது ஏன்?
சீக்கியனின் மயிரைவிட தமிழன் உயிர் சிறியதா ?
ஆஸ்திரேலியாவில் இந்தியர் தாக்கப்பட்டால் துடிக்கும் இந்தியாவே
தெரிந்ததா இனபேதம், நிறபேதம் என்னவென்று ?
நீங்கள் பாடங்கள் கற்று கோள்ள ஆயத்தம் ஆகிவிட்டீர் போலும்...
எம் இன அழிப்பிற்கு துணை நின்ற நாடுகளே எச்சரிக்கை!!
எம் வரலாற்று பெருமைக்குரிய தலைவன் எடுத்த பணி முடிப்பார் ....!!!!!!
Thursday, July 2, 2009
Subscribe to:
Posts (Atom)
