Wednesday, December 30, 2015

உலக பாசீசத்தின் தலைமையே ஆர்.ஸ்.ஸ் !!!



ஹிட்லரின் வம்சமும் நீங்களே...
மூசொலினியின் வஞ்சமும் நீங்களே...
இடியமின் இரக்கமின்மையும்  நீங்களே...
இஸ்ரேலின் ஆனவவுமும் நீங்களே...
அமெரிக்கரின் அடக்குமுறையும் நீங்களே...
ஆங்கிலேய இனவெறியும் நீங்களே...
ரூசியரின் பழிவாங்குமுறையும் நீங்களே...
சீனரின் சூழ்ச்சியும் நீங்களே...
பாகிஸ்தானில் வெடித்த பல குண்டுகளின் காரணமும் நீங்களே...
நேபாளத்தை அடக்க நினைப்பதும் நீங்களே...
முஸ்லிம்களுக்கு தனிநாடு கொடுத்தவரை
கிழவனென்றும் பாராமல் கொன்றதும் நீங்களே...
தடை செய்யப்பட்ட குழுவும் நீங்களே...
பின்பு தலைமறைவாய் வாழ்ந்ததும் நீங்களே...
பார்ப்பனர்களால் தடை நீக்கப்பட்டு
புதுப்பித்து கொண்டவர்களும்  நீங்களே...
கர்மவீரரை தீயிட்டு கொல்ல நினைத்ததும் நீங்களே...
வேறுமத கோவில்களை இடித்து நொறுக்கியதும் நீங்களே...
கிருத்துவ மத பாதரியாரை குடும்பத்துடன்
கொளுத்தியதும் நீங்களே...
குஜராதில் கர்ப்பம் தரித்த  பெண்களின்
வயிற்றை அறுத்து கொன்றதும் நீங்களே...
கை குழந்தையுடன் பெண்களை
வெறிப்பிடித்து கொளுதிக்கொன்றதும் நீங்களே...
ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றவரும் நீங்களே...
ஒரு அரசியல் கிளை தொடங்கி அதனால் ஆட்சியில்
அமர்ந்து அட்டூழியம் செய்பவரும் நீங்களே...
மண்டல் கமிசனால் ஒரு நல்ல பிரதமரை நாடு இழக்க
செய்த நயவஞ்சகரும் நீங்களே...
ஊழல் ஒழிக்க ஒரு கிழட்டு குதிரையை  களமிறக்கி
இப்போது ஊழலை குத்தகை எடுத்த ஓநாயும் நீங்களே...
பல முட்டாள் தலைவர்களை கைக்கு அடக்கமாக
வைத்திருப்பதும் நீங்களே...
உண்மையில்
மக்களை முட்டாளாக்கும் வித்தை அறிந்தவரும் நீங்களே...

இந்துத்துவம் வளர பல இன அழிப்பின் மூலமும்  நீங்களே...
உலகின் முதன்மை தீவிரவாத இயக்கமும் நீங்களே...
பயங்கரவாதத்தின் மறுமுகம் நீங்களே...

அது வேறாருமல்லை நீங்களே ஆர்.ஸ்.ஸ் என்ற வெறி நாய்களே !!!

Friday, September 4, 2015

மனிதன் வாழ

மனிதன் வாழ
சமத்துவம்  வேண்டும்
பாழும்  சாதி அல்ல !!


மனிதம் வேண்டும்
பாழும் மதங்கள் அல்ல !!


அன்பு வேண்டும்
ஆத்திரம் அல்ல !!


சமுதாய அக்கறை வேண்டும்
இந்த பாழும் சாமி அல்ல !!


மனிதன் வாழ
நாம் மனிதனாக வாழ வேண்டும் 
கொடிய மிருகங்களாக  அல்ல!!!


Wednesday, August 19, 2015

கிராம புசாரிகள் மாநாடு

சாதியை வளர்க்கவே இந்த கிராம பூசாரிகள்  மாநாடு......

பார்ப்பான் எப்படி கோயிலில்  உட்கார்ந்துக்கொண்டு சாதிய வளர்க்கிறானோ
அதுபோலவே கிராம பூசாரி அவன் தன் சாதிய வளர்க்கிறான்.... 
சாதிக்கு ஒரு சாமி இருக்கிறது.....
ஆனால் புரியாத ஒன்று இது பார்ப்பனிய எதிர்பே அதனால் பாராட்டு என சிலர் கூற பார்க்கிறேன்...

இந்த மாநாடு நடத்துபவர் சாதி ஒட்டு அரசியல் செய்வது யாவர்க்கும் தெரிந்ததே  ஆனால்  ஒட்டு அரசியலில் பங்குகொள்ளாதவர் சிலர் கூறுவதுதான் சற்று முரணாக உள்ளது.....  

இது என் கருத்து முற்றம்.

சீமான் - ராமதாசு

ராமதாசு - சீமான் ஒரு ஒப்பீடு....

ராமதாசு: உண்மை பெயர் 
தொழில்: மருத்துவம், சாதி வளர்ப்பு, தமிழ் தேசியம் 
ஈழத்திற்கு / தமிழருக்கு ( உயர்ந்த சாதி ) குரல் கொடுப்பார்.
தலித்துகள் இவரக்கு ஆகாது.
தலித் ஆண் உயர் சாதி பெண்ணை மணந்தால், காதல் செய்தால் கலவரம் செய்து எப்படியும் அந்த தலித் ஆணை கொல்லுவார்.
வன்னிய சாதி தமிழன் மட்டுமே தமிழகத்தை ஆளவேண்டும் என்பர்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் மாரி மாரி திராவிட அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர்வார்.
பின்பு கலைஞர், அம்மா இருவரையும் வசைமொழிவார்.
திருமா அவர்கள் இவர் முதல் எதிரி.
தன்னை சாதி வெறியன் என்று பெருமையாக சொல்லுவார். 
தன்னை எப்போதும் திராவிடன் என சொல்லியதில்லை, பெரியார் இவருக்கு  எதிரி.

சீமான்: புனை பெயர்.
தொழில்:  கூத்தாடி, இயக்குனர் , ஈழம் வேண்டுமென ஒரு தொழில், தமிழ் தேசியம்.
ஈழம் இவர் உயிர் மூச்சு  என்பர்.
ஈழ அதரவு தரா எந்த கட்சியும் இவருக்கு பிடிக்காது.
தலித்துகள் சாதி காரணத்தால் கொல்லப்பட்டால் இவர் மட்டுமே அதனை தற்கொல்லை என்று நா கூசாமல் சொல்வார்.
தமிழன் மட்டுமே தமிழகத்தை ஆளவேண்டும் என்பர் பார்ப்பான் உட்பட.
எப்போதும் அம்மா கட்சிக்கு மட்டும் அதரவு என்ற நிலையில் இருப்பார்.
திராவிட கட்சிகள் இயக்கங்கள் இவருக்கு என்றும்  ஆகாது.
கலைஞர் இவரின் முதலும் இறுதியுமான எதிரி. தற்போது வைகோ இணைந்துள்ளார்.
தன்னை பிரபாகரனின் தம்பி என்பார். தன்னை சிலநேரங்களில் பிரபாகரனகவே நிலைப்படுத்துவார்.
சிங்களரை திட்டுவார் தன் படங்களில் சிங்கள பெண் நடிக்கலாம் அது    வணிகம் என்பார்.
தன்னை எப்போதும் திராவிடன் என சொல்லியதில்லை, ஆனால்  பெரியார் இவருக்கு  தாத்தா என சிலநேரங்களில் பெருமை பேசுவார்.

முடிவு:
இருவருக்கும் வேற்றுமையை விட ஒற்றுமையே மேலோங்கி இருக்க காணலாம்.
தமிழ் தேசியமும் - சாதி அரசியலும் பின்னிப்பிணைந்தவை.

தாலி கியறு

பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும்,
அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும்,
இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும்.
புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும்,
இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும்.

ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக்
கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெரியட்டும். அல்லது - புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும்.

தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது. 

-தந்தைப்பெரியார்

இந்து திருமணம்

ஏன் மற்ற மத திருமணங்களில் பெண் அடிமைத்தனம் இல்லையா ? ஏன் எப்போதும் இந்து மதம் மட்டுமே உங்கள் கண்ணகளில் படுகிறது ?

இந்து மதத்தில் தான் ‘கன்னிகாதான முகூர்த்தம்’ ‘தார முகூர்த்தம்’ ‘விவாக சுப முகூர்த்தம்’ என்றுதான் திருமணங்களை குறிப்பிடுவார்கள். இவைகள் எல்லாமே பெண்களை பொருளாக, இழிவாக சித்தரிப்பவை.
பெரியார் இது பற்றி சொல்கிறார்: கன்னிகா தானம் என்பதற்குக் கன்னியைத் தானமாகக் கொடுத்து விடுவது என்று பொருள். …. தாரா முகூர்த்தம் என்றால், பெண்ணை தாரை வார்த்து தானமாகக் கொடுப்பது.

அதனால்தான் பெரியார், ‘வாழ்க்கை ஒப்பந்த விழா’ ‘வாழ்க்கை துணை நலம்’ என்று பெண்களின் மரியாதைக்கு முக்கியத்துவம் தரும் சுயமரியாதை வாக்கியங்களை கொண்டு வந்தார். பெண்கள் கோயில், திருமணம்  தவிர அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததினால்தான் பெரியார் பெண்கள் அதிகம் பங்குகொள்ளும் திருமணங்களில் பேசும் முறையை கொண்டுவந்தார்.

- நன்றி வே மதிமாறன் 

இந்து மதத்தில் தான் திருமணத்தை அல்லது வாழ்க்கை ஒப்பந்தத்தை பெண் அடிமைத்தனத்தை குறிக்கும் சொல்லாடல்கள் அப்பட்டமாக இடம்பெறுகின்றன.

கடவுள் இல்லை

அட முட்டாளே கடவுள் இல்லை என்றால் எந்த  கடவுளும் இல்லை என்று தானே பொருள் படும்...
தனித்தனியாக ஏசு இல்லை அல்லா இல்லை புத்தன் கடவுள் இல்லை என்று எப்படி கூறுவது  
உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தவனும் ஒவ்வொரு கடவுளை ஏற்கிறான் ...

கடவுள்கள் இல்லை என்றால் நாங்கள் இவ்வளவு கடவுள் இருக்கிறது என்று ஏற்பதாக பொருள் படாதா ......

நீங்கள் ஆயிரம் ஆயிரம் கடவுள்கள் வைத்திருப்பீர் நாங்கள் என்ன பட்டியலா இடமுடியும் ..... 

திராவிடம் - ஆரியம்

மிக பெரிய இனங்கள் திராவிடம் - ஆரியம் அதன்  மொழி தமிழ் - சம்சுகிருதம்

ஒரு பார்ப்பனன் தன்னை ஆரியன் இல்லை என்று  மறுத்ததில்லை  மறைத்ததில்லை,   
ஆனால் சில முட்டாள்  தமிழன் தன்னை திராவிடன் இல்லை என்று  முறுத்தும் மறைத்தும் கொள்வான் !!!

ஒரு இனம் உருவானால் தான் ஒரு மொழி உருவாகி இருக்க முடியும்.
ஒரு மொழி உருவாகி இனம் உருவாகி இருக்க  முடியாது இதுதான் உலக இன உருவாதல் நியதி .....

சில செந் தமிழர்கள் தான் நடாத்தும் சாதி அரசியல் தொழிலில் உண்மையை மறைத்து இளந் திராவிடர்களை தமிழன் என்று சாதி சாக்கடைக்குள் தள்ளமுற்படுகிரார்கள்....

திராவிட இயக்கங்கள் உள்ளவரை இவர்கள் தொழில் நட்டமே....

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு - கொடுக்கப்பட்ட சலுகை அல்ல அது  வேன்றேடுத்த  உரிமை....

ஒவ்வொரு நூறு மக்களுக்கு 3 பார்ப்பான் , 16 ஆதி திராவிடர் , 72 பார்ப்பனர் அல்லாதோர் இவர்கள் அனைவருக்கு சமமான விகிதத்தில் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்.
ஆனால் மூன்றே விழுக்காடு இருக்கும்  கூட்டம்  அனைத்து வேலை வாய்ப்பையும் எடுத்து கொண்ட நிலையை தடுக்கவே இந்த இடஒதுக்கீடு.
அந்த முன்றே விழுகாடு மக்களால்  அனுபவிக்கப்பட்ட வந்த கல்வி, வேலை முற்றும் பல அரச சலுகைகள் அணைத்தும்  பிற மக்களுக்கும் சென்றடைய வேண்டி உருவாக்கப்பட்டதே இடஒதுக்கீடு.
ஏன் - இடஒதுக்கீடு என்றல் சிலருக்கு வயிறெரிச்சல்
ஆதிக்க சாத்தினார் பிற்படுத்த பட்டோருக்கு இடமளிப்பதை ஒருப்போதும் ஏற்றதில்லை படித்த  ஆளும்  வர்க்கம் கூட்டக சேர்ந்து எதிர்ப்பது தகுதி அடிப்படையிலான வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக  என்று  நாம் எண்ணிவிட கூடாது 
அது முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்டோர் மீதான வெறுப்பே அன்றி வேறில்லை.

தங்களால் அடிமை படுத்தப்பட்டு வந்த இனம்  இப்போது கல்வி , வேலைவாய்ப்பு மற்றும்  அதிகாரத்திலும்  பங்கு கொள்ள வந்ததினால் ஏற்பட்ட எரிச்சலே....

திராவிடன்

தன் இனம் மொழி இதுவென்று  
    புரிந்தவன்  திராவிடனாகிறான்.......
தன் இனம்  இதுவென்று 
    தெரியாதவன் சூத்திரனாகிரான் 
இல்லை
 தன்னை தமிழனென்கிறான்.....

காவி நாடு

மனிதம் அழிக்கும்  மாமலையாம்
பசுக்கள் மட்டும்!! அது கொலையாம் 
சட்டம் என்று கொலை செய்து 
இந்தியம் என்ற கொலை காத்து 
இந்து தீவிரம் வாழ்கவே !!!

வருணம் என்ற வழி மொழியில் 
வர்க பேதம் போற்றி வாழ 
ஆளுக்கொரு சாதி கொடுத்து 
பூணூல்கள் மட்டும் வளர்ப்போமே  !!!

தனித்தன்மை வாய்ந்த - எங்கள் 
இந்து  மதம் போற்றுவோம்
மத சார்பு இல்லை  உரக்க உரக்க கூறுவோம் !!!

மலிந்தோர்க்கில்லை  இந்நாடு !!!
மானமில்லா ஒரு நாடு !!!

இதுவே உங்கள் காவி நாடு !!!

இந்தியா

இந்தியா 
கொத்தடிமைகள் இல்லாத நாடா 
தீண்டாமை இல்லாத நாடா 
சாதிகள் இல்லாத நாடா 
பஞ்சம் இல்லாத நாடா 
பட்டினிகள் இல்லாத நாடா 
பாலின வன்முறைகள் இல்லாத நாடா 
சமத்துவம் பேசும் நாடா 

முதலில் இது மொத்தமும் ஒரு நாடா 
போடா ....
இது ஒரு நாடு அதுக்கு சுதந்திரம் ( விடுதலை ) ஒரு கேடு ....