இடஒதுக்கீடு - கொடுக்கப்பட்ட சலுகை அல்ல அது வேன்றேடுத்த உரிமை....
ஒவ்வொரு நூறு மக்களுக்கு 3 பார்ப்பான் , 16 ஆதி திராவிடர் , 72 பார்ப்பனர் அல்லாதோர் இவர்கள் அனைவருக்கு சமமான விகிதத்தில் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்.
ஆனால் மூன்றே விழுக்காடு இருக்கும் கூட்டம் அனைத்து வேலை வாய்ப்பையும் எடுத்து கொண்ட நிலையை தடுக்கவே இந்த இடஒதுக்கீடு.
அந்த முன்றே விழுகாடு மக்களால் அனுபவிக்கப்பட்ட வந்த கல்வி, வேலை முற்றும் பல அரச சலுகைகள் அணைத்தும் பிற மக்களுக்கும் சென்றடைய வேண்டி உருவாக்கப்பட்டதே இடஒதுக்கீடு.
ஏன் - இடஒதுக்கீடு என்றல் சிலருக்கு வயிறெரிச்சல்
ஆதிக்க சாத்தினார் பிற்படுத்த பட்டோருக்கு இடமளிப்பதை ஒருப்போதும் ஏற்றதில்லை படித்த ஆளும் வர்க்கம் கூட்டக சேர்ந்து எதிர்ப்பது தகுதி அடிப்படையிலான வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக என்று நாம் எண்ணிவிட கூடாது
அது முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்டோர் மீதான வெறுப்பே அன்றி வேறில்லை.
தங்களால் அடிமை படுத்தப்பட்டு வந்த இனம் இப்போது கல்வி , வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வந்ததினால் ஏற்பட்ட எரிச்சலே....

No comments:
Post a Comment